இரட்டை கர்ப்பங்கள் ஒற்றைக் கர்ப்பங்களை விட மிகவும் வித்தியாசமானவை. எனவே, இவற்றின் கண்காணிப்பும் தீவிரமாக இருக்கும். எல்லா இரட்டை கர்ப்பங்களிலும் சில சிக்கல்கள் ஏற்பட கூடுதல் வாய்ப்பு உள்ளது.

கர்ப்ப காலத்தில் இரட்டையர்களை “ஓரு நஞ்சு இரட்டையர்” “இரு நஞ்சு இரட்டையர்” என எத்தனை நஞ்சு உள்ளது என்பதை பொருத்து பகுப்போம். இது மிக முக்கியமானது. இந்த பகுப்பினைப் பொருத்து தான் உங்கள் கர்ப்பத்தின் கண்காணிப்பு இருக்கும். இரு நஞ்சு இரட்டை கர்ப்பங்களை மாதம் ஒரு முறை ஸ்கேன் மூலம் கண்காணித்தால் போதுமானது. ஆனால், ஒரு நஞ்சு இரட்டை கர்ப்பங்களை மாதம் இரு முறை ஸ்கேன் மூலம் கண்காணித்தல் அவசியமானது.

ஏனெனில், ஒரு நஞ்சு இரட்டை கர்ப்பங்களில் சுமார் 15% கர்ப்பங்கள் பிரத்யேக சிக்கல்களை சந்திக்கின்றன. “ஓரு சிசு வளர்ச்சி குன்றுதல்” “ஒன்றுக்கு ஒன்று இரத்தம் பகிர்தல்” போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால் சரியான தருணத்தில் கண்டறிந்து, சிகிச்சை அளித்தால் தான் கர்ப்பத்தின் முடிவை தேத்த முடியும்.

தி ஃபீட்டல் க்ளினிக் இல் நடைமுறையில் உள்ள இரட்டையர் கண்காணிப்பு நெறிமுறையானது, உலகத் தரம் உள்ளது. ஒவ்வோரு முறையும் இரட்டையரின் அளவு, வளர்ச்சி, பன்னீர், இரத்த ஓட்டம் யாவையும் துள்ளியமாக அளவிட்டு கர்ப்பத்தின் நலனும் சிசுக்களின் நலனும் பரீசீலிக்கப்படும்.

இதில், முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில், “ஓரு நஞ்சு / இரு நஞ்சு இரட்டையர்” என்ற பாகுபாடு முதல் மூன்றாம் மாத ஒருங்கிணைந்த பரிசோதனை ஸ்கேனில் மட்டுமே துள்ளியமாக கண்டறிய இயலும்.