கருப்பை சிசு நோய் கண்டறியும் நேரடி பரிசோதனைகள்
பொதுவாக சி.வி.எஸ் என அழைக்கப்படும் இந்த செயல்முறையானது, நஞ்சுறுப்பில் செய்யப்படும் பரிசோதனை ஆகும். தாயின் வயிறு, கருப்பை வழியாக நஞ்சுறுப்பினுள் ஒரு ஊசியைச் செலுத்தி அது வழியாக சிறு துகல்கள் எடுக்கப்படும். ஊசி செல்லுகின்ற முழு நேரமும் அல்ட்ராசவுண்ட் மூலம் அது கண்காணிக்கப்படும். தாய்க்கு வலி இல்லாமல் இருக்க, முதலில் மறத்துப்போகும் ஊசி தாயின் வயிற்றுக்கு வழங்கப்படும்.
செயல்முறை பொதுவாக பாதுகாப்பானது: ஆரோக்கியமான கர்ப்பங்களில், அனுபவம் வாய்ந்த கைகளில், செயல்முறை தொடர்பான கர்ப்ப இழப்பு 0.5% க்கும் குறைவாகவே இருக்கும். பெறப்பட்ட திசு பின்னர் அந்த குறிப்பிட்ட வழக்கின் தேவைக்கேற்ப பல்வேறு மரபணு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.
சி.வி.எஸ் செய்ய மிகவும் பொதுவான காரணம் டவுன் நோய் உள்ளதா என நிர்ணயிப்பதே. முந்தைய கர்ப்பத்தில் டவுன் நோயுடன் குழந்தை பிறப்பு, தாயின் வயது 35 வயதுக்கு மேல் இருத்தல், டவுன் நோய் ஸ்கிரீனிங் பரிசோதனை அதிக வாய்ப்பைக் காட்டுதல் போன்ற காரணங்கள் இருப்பின் இத்தகைய சி வி எஸ் முறை பரிந்துரைக்கப்படும். முந்தைய குழந்தை அல்லது குடும்ப உறுப்பினர் யார்க்கேனும் மரபணு தொடர்பான நோய் இருப்பின், அத்தகைய நோய் கருப்பையில் இருக்கும் சிசுவிற்கும் வந்துள்ளதா எனக் கண்டறிய இந்த சி வி எஸ் பயன்படுகிறது.
இப்பரிசோதனை 11வது வாரம் முதல் 14 வது வாரம் வரை செய்யப்படுகிறது. நோயாளியின் பகுதியிலிருந்து சிறப்பு முன்னேற்பாடு எதுவும் தேவையில்லை: நல்ல குளியல், எளிய காலை உணவு மற்றும் வசதியான தளர்வான உடையில் வாருங்கள். ஒப்புதல் படிவங்கள் பூர்த்தி செய்த பிறகு, செயல்முறை சுமார் 20 நிமிடங்கள் எடுக்கும், அதைத் தொடர்ந்து மேலும் 30 நிமிடங்களுக்கு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்படும். சில மணிநேரங்கள் மருத்துவமனை வளாகத்தில் இருந்துவிட்டு பின்னர் நீங்கள் வீடு திரும்பலாம்.
சுமார் ஒரு வாரம் கனமான வேலையைத் தவிர்க்க அறிவுறுத்தப்ப்டுவீர். இந்த பரிசோதனைக்குப் பிறகு ஓரிரு நாட்களில் சுமார் 2% பெண்களுக்கு லேசாக உதிரம் அல்லது நீர் சொட்டுப்போக்கு அனுபவிக்கக்கூடும், இது கவலைக்குறியது அல்ல. தொடர்ந்து இரத்தப்போக்கு, கசிவு, காய்ச்சல், வயிற்றுவலி இருந்தால் தாமதமின்றி உங்கள் மகப்பேறியல் நிபுணரை அணுக வேண்டும்
‘அம்னியோ’ என்றும் குறிப்பிடப்படும் இந்த எளிய பரிசோதனையில் ஒரு சிறு ஊசி தாயின் வயிற்றின் வழியாக செலுத்தி சுமார் 20 மில்லி பன்னீர் எடுக்கப்படும். ஊசி எப்போதும் அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதலின் கீழ் இருக்கும், இதனால் அது கருவுக்கு தீங்கு விளைவிக்காது.
ஒரு அம்னோசென்டெசிஸ் பரிசோதனையைச் செய்வதற்கான காரணங்கள் அடிப்படையில் ஒரு சி வி எஸ் (cvs) செய்வதற்கு சமமானவை. அம்னியோ சோதனை 15 வாரங்களுக்குப் பிறகு செய்யப்படுகிறது. அம்னியோ சோதனையின் பாதுகாப்பு மற்றும் சிக்கல்கள் அனுபவம் வாய்ந்த கைகளில் சி.வி.எஸ் க்கு சமமானவை.
இரண்டு சோதனைகளுக்கிடையில் எதை தேர்ந்தெடுப்பது என்பதை மருத்துவர் பகுப்பாய்வு செய்து பரிந்துரைப்பார். சி.வி.எஸ் பரிசோதனையில் முன்னரே முடிவுகள் அறியவல்ல இலாபம் உள்ளது, அதே நேரத்தில் அம்நியோ அதன் தொழில்நுட்ப எளிமை காரணமாக சுலபமாகக் கிடைக்கும்.
இப்பரிசோதனை 15வது வாரம் முதல் செய்யப்படுகிறது. நோயாளியின் பகுதியிலிருந்து சிறப்பு முன்னேற்பாடு எதுவும் தேவையில்லை: நல்ல குளியல், எளிய காலை உணவு மற்றும் வசதியான தளர்வான உடையில் வாருங்கள். ஒப்புதல் படிவங்கள் பூர்த்தி செய்த பிறகு, செயல்முறை சுமார் 20 நிமிடங்கள் எடுக்கும், அதைத் தொடர்ந்து மேலும் 30 நிமிடங்களுக்கு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்படும். சில மணிநேரங்கள் மருத்துவமனை வளாகத்தில் இருந்துவிட்டு பின்னர் நீங்கள் வீடு திரும்பலாம்.
சுமார் ஒரு வாரம் கனமான வேலையைத் தவிர்க்க அறிவுறுத்தப்ப்டுவீர். இந்த பரிசோதனைக்குப் பிறகு ஓரிரு நாட்களில் சுமார் 2% பெண்களுக்கு லேசாக உதிரம் அல்லது நீர் சொட்டுப்போக்கு அனுபவிக்கக்கூடும், இது கவலைக்குறியது அல்ல. தொடர்ந்து இரத்தப்போக்கு, கசிவு, காய்ச்சல், வயிற்றுவலி இருந்தால் தாமதமின்றி உங்கள் மகப்பேறியல் நிபுணரை அணுக வேண்டும்
சில சூழ்நிலைகளில், கருவின் இரத்தத்தை நேரடியாக பரிசோதிப்பது அவசியம். பொதுவாக, ஹைட்ராப்ஸ் எனப்படும் கரு நிலை இருக்கும்போது, கருவுக்குள் திரவம் குவிந்துவிடும், அதற்கான காரணத்தைக் கண்டறிய கருவின் இரத்த மாதிரி தேவைப்படுகிறது. மற்ற சூழ்நிலைகளில், சோதனைக்கான காரணங்கள் அடிப்படையில் சி வி எஸ் (cvs) மற்றும் அம்னோசென்டெசிஸ் போன்றவை. பொதுவாக, 20 வாரங்களுக்கு அப்பால் சோதனை செய்யப்படும்போது, அம்னோசென்டெசிஸை விட FBS விரும்பப்படுகிறது.
இப்பரிசோதனை 20வது வாரம் முதல் செய்யப்படுகிறது.நோயாளியின் பகுதியிலிருந்து சிறப்பு முன்னேற்பாடு எதுவும் தேவையில்லை: நல்ல
குளியல், எளிய காலை உணவு மற்றும் வசதியான தளர்வான உடையில் வாருங்கள். ஒப்புதல் படிவங்கள் பூர்த்தி செய்த பிறகு, செயல்முறை சுமார் 20 நிமிடங்கள் எடுக்கும், அதைத் தொடர்ந்து மேலும் 30 நிமிடங்களுக்கு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்படும். சில மணிநேரங்கள் மருத்துவமனை வளாகத்தில் இருந்துவிட்டு பின்னர் நீங்கள் வீடு திரும்பலாம்.
சுமார் ஒரு வாரம் கனமான வேலையைத் தவிர்க்க அறிவுறுத்தப்ப்டுவீர். இந்த பரிசோதனைக்குப் பிறகு ஓரிரு நாட்களில் சுமார் 2% பெண்களுக்கு லேசாக உதிரம் அல்லது நீர் சொட்டுப்போக்கு அனுபவிக்கக்கூடும், இது கவலைக்குறியது அல்ல. தொடர்ந்து இரத்தப்போக்கு, கசிவு, காய்ச்சல், வயிற்றுவலி இருந்தால் தாமதமின்றி உங்கள் மகப்பேறியல் நிபுணரை அணுக வேண்டும்.